இ-பாக்ஸ் மெக்கானிக்கல் திறன் மேம்பாட்டு பயிற்சி – இந்தியாவின் இண்டஸ்ட்ரி 4.0 பயணத்தின் முக்கிய மைல்கல்
பொறியியல் பிரிவில் மெக்கானிக்கல் துறையின் தற்போதைய நிலை குறித்து விவரிக்கப்படும் அம்சங்கள் அனைத்துமே தவறானவை. 2020 ஆம் ஆண்டில் மெக்கானிக்கல் துறையே மிக குறைவான அளவில் தேர்ந்தெடுக்கப்படுள்ளது என்பதை உங்களால் நம்ப முடிகிறதா? மொத்த உலகமும் இண்டஸ்ட்ரி 4.0 என்ற இலக்கை நோக்கி நகர்கிறது! நம்முடைய வருங்காலம் என்பது அதி நவீன இயந்திரங்களால் அமையவிருக்கிறது. இப்படியொரு சூழலில், கல்வியுலகம் இந்த முக்கிய பாடப்பிரிவு குறித்து கவனம் கொள்ளாமல் இருந்தால் அது எப்படி இந்தியாவிற்கு சாதகமானதாக அமையும்?


மெக்கானிக்கல் துறை குறித்து நாம் கொண்டிருக்கும் தற்போதைய பார்வை தவறானது. நம்முடைய தொலைநோக்கு பார்வை எத்தனை பலவீனமாக உள்ளது என்பதன் அறிகுறியாக அது அமைந்துள்ளது. ஒரு தேசமாக தகவல் தொழில்நுட்ப துறையில் நாம் அடைந்த தலைமைத்துவத்தை முறையாக பயன்படுத்தவில்லையெனில் நாம் பின்னடைவை சந்திக்க நேரலாம். தொழில்நுட்ப ரீதியாக முன்னேறிய தேசமாக இருக்கும் வேளையில் , வருங்கால உலகம் இயந்திரம் சார்ந்ததாக இருக்கும் என்கிற விழிப்புணர்வை கொண்டிருக்க வேண்டும்.


The entire packaging cycle, from erecting the box, placing the product into box, followed by pushing it through the tape sealer.
அந்த இயந்திரங்கள் வருங்காலத்தில் 24 மணிநேரமும் வாரத்தின் ஏழு நாட்களும் செயல்படுபவையாக இருக்கும். அவை நம் நகரை கண்காணிக்கும், அவைகள் போர் களத்தில் நின்று போரிடுவதை நாம் காண நேரிடும், தொழிற்சாலைகளில் அறிவார்ந்த பல ரோபோட்கள் இயங்குவதையும், வணிக ரீதியான தேவை, சேவை, இயக்கம், உற்பத்தி, விலை நிர்ணயம் போன்றவைகளை புரிந்து கொள்ளக்கூடியவையாக இருக்கும் மேலும் வணிகரீதியான பல முக்கிய முடிவுகளையும் அவை எடுக்கும் நாட்கள் வெகு தூரத்தில் இல்லை. போக்குவரத்தினை கட்டுப்படுத்தும் இடத்திலும் ரோபோட்கள் கூடிய விரைவில் இடம்பெறும். எளிமையாக சொன்னால், அவை எல்லா இடங்களிலும் இருக்கும்.


வருங்கால சூழல் இத்தனை தெளிவாக நம் கண் முன் விரிந்திருக்கும் போது, மெக்கானிக்கல் துறையை பெரும்பாலனவர்கள் தேர்வு செய்யாமல் இருப்பது ஆச்சர்யம் தான்! வருங்காலத்தை ஆளவிருக்கும் இந்த இயந்திரங்களை வடிவமைக்க, உருவாக்க, கட்டமைக்க மற்றும் ஆய்வு செய்ய நமக்கு பல சாமர்த்தியமான பொறியாளர்கள் தேவை. இந்த தேவையை நாம் போர்கால அடிப்படையில் பூர்த்தி செய்ய வேண்டும். இப்படியொரு சூழல் உருவாகியிருக்கையில் கல்வித்துறையும், அறிவார்ந்த அறிஞர்களும் எங்கே சென்றுவிட்டார்கள் என்ற கேள்வி எழுகிறது. பாட திட்டத்தில் முறையான மாற்றம் நிகழ்த்தப்படாவிட்டால் ஒரு சமூகமாக நாம் தோல்வியை தழுவுவோம் என்பதை நாம் உணர வேண்டும்.


திறனை மேம்படுத்தும் நிறுவனங்களும், தொழில்நுட்ப பல்கலைகழகங்களும் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் புதுமையான சிந்தனைகளுக்காக திட்டக்குழு ஆணையத்துடனும், ஒரே பாதையில் பயணிக்க வேண்டியது அவசியம். நம் வருங்காலத்தை நல்லமுறையில் உறுதி செய்யும் பொருட்டு, பாடப்பிரிவுக்கான ஆலோசனையின் போதோ அல்லது அதற்கு முன்னதாகவோ, ஏன் இந்த அறிஞர்கள் யாரும் தலையிட்டு கருத்து தெரிவிக்கவில்லை என்பது ஆச்சர்யமாகவே உள்ளது. இச்சூழலில் நமக்கு ஒருங்கிணைந்த அணுகுமுறை தேவை. இப்படியொரு நிலையில் மாணவர்களுடன் கல்வி, தொழிற்சாலை, மற்றும் நிதி ஆகிய அமைச்சகங்கள் கலந்துரையாடியிருக்க வேண்டும். நம் நாட்டின் வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்த இருக்கும் துறை எது என்பதை தெரிந்து கொண்டு முடிவு எடுக்க வேண்டிய தேவை மாணவர்களுக்கு உண்டு.

கல்வி, பின் ஒரு வேலை திருமணம் அதன் பின் ஒரு வீடு கார் ஆகியவற்றுடன் மட்டும் நிறைவடைந்துவிடாமல் அதையும் தாண்டி நாம் செல்ல வேண்டியிருக்கிறது என்பதை நம் வருங்கால குழந்தைக்கு கற்பிக்க வேண்டியது நம் சமூக கடமை. தங்களுடைய பொறுப்புகளையும், உலகளவில் தாங்கள் ஏற்படுத்த வேண்டிய மாற்றத்தையும் வருங்கால தலைமுறையினர் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். நம்முடைய வருங்கால தேவையை நம்மிடம் உள்ள மனித வளத்துடன் இணைக்க வேண்டிய கடமை நம் அரசாங்கத்திற்கு, பல்கலைகழகங்களுக்கு, நம் நாட்டின் கல்வியாளர்களுக்கு, தொழில்முனைவோர்களுக்கு உண்டு.


பாடப்பிரிவினை தேர்வு செய்கையில் கண்மூடித்தனமாக எந்த எதிர்கால சிந்தனையுமின்றி தேர்வு செய்யும் மனநிலை மாற வேண்டும். இண்டஸ்ட்ரி 4.0 எனும் நம் வருங்கால இலக்கிற்கு தேவையான திறன் மேலாண்மையில் சமநிலை அடையும் இடத்தினை நாம் விரைவில் அடையவேண்டும். பொறியியலின் அனைத்து துறைகளிலும் நம் தேசம் முழுமையான அறிவையும் திறனையும் பெற்றிருக்க வேண்டும். வருங்கால இந்தியா பன்முகத்தன்மை கொண்டதாக, பல துறையிலும் நிபுணத்துவம் பெற்ற பொறியாளர்களை கொண்டதாக திகழ வேண்டும். இவ்வகை பொறியாளர்களால் பல்வேறு துறைகளை கையாளவும், இடைமறித்து கருத்துகளை தெரிவிக்கவும் இயலவேண்டும். ஆகவே, நம் தேசத்தின் பொறியியல் தேவையை வலுப்படுவதில் முதன்மையான துறையாக்க விளங்கும் மெக்கானிகல் துறையின், பொறியாளர்களை நாம் ஒரு போதும் இழக்க கூடாது.


எனவே, இண்டஸ்ட்ரி 4.0 எனும் வருங்கால இலக்கினை அடையவும் அதனை தாண்டி நாம் முன்னேறவும் இபாக்ஸ் பல ஆய்வுகளை மேற்கொண்டு உள்ளது. மேலும் மெக்கானிக்கல் பொறியாளர்களுக்கு தேவையான திறன் அமைப்பு எது என்பதை புரிந்து கொண்டுள்ளது. வருங்காலத்தை எதிர்கொள்ளும் விதமாக , மெக்கானிக்கல் அறிவியல் துறையில் பல விதமான ஆய்வுகளை பல்லாண்டு காலமாக மேற்கொண்டு பின்வரும் மூன்று பயிற்சிகளை வடிவமைத்துள்ளது இபாக்ஸ்.மேல் கூறிய இந்த பயிற்சிகள் அனைத்தும் , படைப்பாற்றல், கற்பனை திறன், வடிவமைப்பு, மாடலிங், மற்றும் உத்திகளை கையாளும் திறன் உற்பத்தி திறன் ஆகியவற்றை பொறியியலில் மெக்கானிக்கல் துறையை தேர்வு செய்த ஒரு மாணவனுக்கு முழுமையாக வழங்கும். எனவே, இந்த மூன்று மைக்ரோ டிகிரியை ஒரு மாணவர் கற்றிருந்தால் அவர் எந்த கல்லூரியை தேர்வு செய்திருக்கிறார் என்பது ஒரு பொருட்டே அல்ல. இது போன்ற திறன்கள் நிரம்பிய பொறியாளர்களே வருங்கால இன்டஸ்ட்ரி 4.0 விற்கு தேவை.


எனவே, இந்த முன்முயற்சியில் நாம் தீவிரமாக இயங்கி இந்த பயிற்சி அமர்வில் மேலும் பல மெக்கானிக்கல் மாணவர்கள் சேர்வதை நாம் உறுதி செய்ய வேண்டும். இந்த மைக்ரோ டிகிரி என்பது வெறும் வேலைவாய்ப்புக்கானது மட்டுமல்ல வருங்காலத்தை துணிவுடன் எதிர்கொள்ள வேண்டி நம் தேசத்தை கட்டமைப்பதற்காக. இனி வருங்காலத்தை எதிர்கொள்ள இந்த பயிற்சியின் துணையுடன் தயாராக இருப்போம்.
ஜெய்ஹிந்த்

Talk to an Expert Now
A few Details about Yourself and our Experts will contact you
Name *
Email *
Mobile Number *
This page is available inEnglishX